விமான ஊழியர்கள் அலட்சியம் உடைந்த கடம் வாத்தியம்| Dinamalar

பெங்களூரு : பிரபல கடம் வித்வான் கிரிதர் உதுப், டில்லி சென்றபோது, தனியார் விமான நிறுவன ஊழியர்கள், கடம் இருந்த பெட்டியை சரியாக கையாளவில்லை என்பதால், அது உடைந்தது.பெங்களூரு தியாகராஜ நகரை சேர்ந்தவர் கிரிதர் உதுப், 36; கடம் வித்வான். டில்லியில் பிரபல கிராமிய விருது பெற்ற ரிக்கி கேஜ் நிகழ்ச்சியில் கடம் வாசிக்க, கடந்த 10ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் டில்லி சென்றார்.கடம் வாத்தியத்தை, தான் வழக்கமாக கொண்டு செல்லும் நீல நிற பெட்டியில் வைத்திருந்தார்.

டில்லி சென்றவுடன், தனது பெட்டியை திறந்தபோது, கடம் உடைந்து இருந்தது. இதனால் அன்றைய தினம் கடம் வாசிக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.இது குறித்து, இண்டிகோ நிறுவனத்திடம் புகார் தெரிவித்தபோது, 72 மணி நேரமாக எந்தவித பதிலும் அவர்களிடம் இருந்து வரவில்லை.’பொருட்களை கையாளும் குழுவினரின் அஜாக்கிரத்தையால் வேதனை அடைந்தேன்’ என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.இதையறிந்த விமான நிறுவனம், அவரிடம் மன்னிப்பு கேட்டது; நிவாரணம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.