ரணில் அரசாங்கத்திற்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியானது! பெருகும் அந்நிய செலாவணி


இலங்கைக்கு மீ்ண்டும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.

இதனால் இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17000ஐத் தாண்டியுள்ளது.

மே 9 கலவரம்! இராணுவத்திற்கு உத்தரவிட விரும்பாத கோட்டாபய 

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாகக் குறைந்தது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

ரணில் அரசாங்கத்திற்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியானது! பெருகும் அந்நிய செலாவணி | Good News About Sri Lanka

ஆனால் நாடு மீண்டும் நிலைபெறத் தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இந்தியா, கனடா போன்ற நாடுகளில் இருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் 

மே மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 650 பேராக மட்டுப்படுத்தப்பட்டு தற்போது 1600 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.