பீதர் : சுதந்திர தினம் முடிந்தும் பல வீடுகள், கடைகளில் தேசியக்கொடிகள் இறக்கப்படவில்லை. ‘சரியான முறையில் விழிப்புணர்வு செய்யாத அதிகாரிகளே காரணம்’ என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.நாடு முழுதும் வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
விதிமுறைப்படி 15ம் தேதி மாலையில் தேசியக்கொடியை கவுரவத்துடன் இறக்கி இருக்க வேண்டும். ஆனால் சுதந்திர தினம் முடிந்து, நேற்று கூட பீதரின் ஹும்னாபாத்தில் உள்ள பல வீடுகள், கடைகள் உட்பட மாநிலத்தின் பல இடங்களில் தேசியக்கொடிகள் பறந்து கொண்டிருந்தன.இது குறித்து, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் அவரது உத்தரவின்படி, தாலுகா நிர்வாக அதிகாரிகள் நேற்று ஒலிப்பெருக்கி மூலம் தேசியக்கொடியை கவுரவத்துடன் இறக்க வேண்டும் என அறிவித்தனர். இதையடுத்து கொடிகள் அனைத்தும் இறக்கப்பட்டன.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘அதிகாரிகள் கடைகள் தோறும் தேசியக்கொடியை பறக்க விடுங்கள் என கொடிகளை விற்பனை செய்து சென்றனர். அதை 15ம் தேதி மாலையே கீழே இறக்க வேண்டும் என கூறவில்லை. அதிகாரிகள் அலட்சியம்தான் காரணம்’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement