சென்னை தி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் மற்றும் மனிதம் என்கின்ற மனித உரிமை அமைப்பும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகத்தில் நடைபெற உள்ள பாஜக அரசிற்கான எதிரான போராட்டத்தை குறித்தும் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் சந்தேகம் தொடர்பான ஆய்வு அறிக்கையை மனிதம் குழு சார்பில் முதல்வரிடம் வழங்கப்பட உள்ள அதை குறித்தும் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மனிதம் என்கின்ற மனித உரிமைக் குழு அமைப்பு கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணம் குறித்து நேரடியாக களத்தில் சென்று பல்வேறு விசாரணைகளும் மேற்கொண்டு அது குறித்த அறிக்கையையும் பரிந்துரைகளையும் தமிழக அரசுக்கு வழங்க உள்ளனர்.
மேலும் பாஜக பதவி ஏற்ற 8 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து உள்ளது இலவசங்களை அனுமதிக்கக்கூடாது என மோடி கூறியதை சிபிஐஎம் வண்மையாக கண்டிக்கிறது .
அரிசிக்கு வரி விதித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த வரி விதித்து வருகிறது மோடி அரசாங்கம். இது போன்ற பல அம்சங்களை மக்களுக்கு வலியுறுத்தி ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 5 வரை இந்தியாவின் இருள் அகற்றுவோம் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற கருத்தை முன்வைத்து 50 லட்சம் வீடுகளை அனுகி 5 ஆயிரம் குழுக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்த உள்ளோம்
அரசாங்கத்தை குறை சொல்வது மட்டுமல்லாமல் மாற்று கொள்கையை வலியுறுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். அதன் இறுதியாக செப்டம்பர் 5 ல் சென்னையில் மாநிலம் தழுவிய மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறினார்
தொடர்ந்து மனிதம் என்கின்ற மனித உரிமை அமைப்பு மேற்கொன்ட ஆய்வில் சந்தேக மரணம் அடைந்த ஸ்ரீமதியின் மரணத்தில் அதிகப்படியாக திட்டமிட்ட கொலை நடந்துள்ளதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் , உடற்கூறு ஆய்வில் மரணத்திற்கு முன்னதாக பல தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது
ஸ்ரீமதியின் இரண்டாவது உடற்கூறு ஆய்விற்க்கு பெற்றோர் தரப்பிலிருந்து மருத்துவரை அனுமதிக்க தொடர்ந்து வழக்கில் அதற்கான அனுமதி மறுத்த நீதிபதிகள் இதுபோன்று முன்ன நடந்த உடற்கூறாய்வில் அவர்களுக்கு நம்பிக்கைக்குறிய மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர்.
இதற்கு சரியான காரணம் என்ன என்று கூட தெரியவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மன உணர்வை புரிந்து கொள்ளாமல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது வருத்தத்திற்கு உரியது என்றும் மாணவியின் சந்தேக மரணத்தில் நியாயமான புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அன்று நடந்த கலவரத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களா என்று குறி வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுவதாகவும் அவர்களை விடுதலை செய்து வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .
மேலும் பள்ளி நிர்வாகிகளின் பிள்ளைகள் இதுவரை விசாரணை வலைத்திற்குள் வரவில்லை என்றும் விரைந்து தமிழக அரசும் காவல்துறையும் அதை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருந்தாலும் எங்கோ நடக்கும் இது போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையாக முதலமைச்சரை காரணமாக்க முடியாது என்று கூறிய அவர், நான்கு நாட்கள் கலவரங்கள் ஏற்படுவதற்கு முன்பிருந்தே அந்த மாவட்ட காவல் துறையினர் உயர் அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்பது உண்மை என குற்றஞ்சாட்டினார்.
தஞ்சாவூர் மைக்கேல் பட்டி பள்ளியில் இருந்த மாணவி மரணத்திற்கு சென்ற அண்ணாமலை ஏன் ஸ்ரீமதியின் மரணத்திற்கு செல்லவில்லை என கேள்வி எழுப்பிய அவர், ஆர் எஸ் எஸ் இன் அழுத்தத்தின் காரணமாக அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையோ என்கின்ற சந்தேகம் எழுகிறது என்றும் கூறி உள்ளார். தமிழகத்தில் திமுக அரசுடன் பல மதச்சார்பற்ற காட்சிகள் இணைந்து மோடி அரசை எதிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நேற்று முதலமைச்சரின் உரை குறித்த நிரூபரின் கேள்விக்கு மத்திய அரசு மாநில அரசு உறவு என்பது வேறு பாஜக திமுகவின் உறவு என்பது வேறு என்பதை ஆணித்தரமாக கூறும் வகையில், பாஜகவும் திமுகவும் இணைகிறதா என்ற பலரின் பொய்யான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்படி நேற்று முதலமைச்சர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இது போன்ற பொய் வதந்திகளை பாஜகவினர் கிளம்பி வருகின்றனர்
சாதி வாரி கணக்கீடு வலியுறுத்தி வரும் கட்சிகள் குறித்து கேள்விக்கு, பதிலளிக்கையில், இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை பெற அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தி வருகிறது ஆகவே இந்திய அளவில் சாதிவாரி கணக்கீடு என்பது தேவையான ஒன்றுதான் என தெரிவித்தார்.
பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையம் குறித்து பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்பான கேள்விக்கு எந்த ஒரு வளர்ச்சி பணிகள் ஆயினும், பொதுமக்களை பாதிக்காத வண்ணம் அவர்களின் ஒத்துழைப்போடு நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.