கடந்த ஆண்டு பிரித்தானிய மகாராணியாரின் அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தான் ராணியைக் கொல்ல வந்துள்ளதாக அவர் தெரிவித்ததாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணியாரின் அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், நான் ராணியைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று காவலர்களிடம் கூறியதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரித்தானிய மகாராணியாரின் விண்ட்சர் மாளிகைக்குள் வில் அம்புடன் நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைவிலங்கிடப்படும் முன் அரண்மனைக் காவலர்களிடம், நான் ராணியைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று கூறினாராம் அவர்.
image – thesun
விசாரணையில், பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றிவந்த அந்த நபருடைய பெயர் ஜஸ்வந்த் சிங் (Jaswant Singh Chail) என தெரியவந்தது. தான் ஒரு இந்திய சீக்கியர் என்று கூறியுள்ள ஜஸ்வந்த், பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1919இல் இந்தியாவிலுள்ள அமிர்தரஸ் என்ற இடத்தில் பிரித்தானிய படையினரால் இந்தியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக தான் மகாராணியாரை கொல்ல வந்ததாக தெரிவித்திருந்தார்.
மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜஸ்வந்த், இன்று காணொளி வாயிலாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்தபோது பிரித்தானிய மகாராணியார், தனது மகனும் வருங்கால மன்னருமான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியான கமீலா ஆகியோருடன் அரண்மனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Credit: PA