மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளதால், அத்தகைய தலையீடு எதுவும் இல்லாமல் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச கால்பந்து கவுன்சிலான FIFA தொடர்பான வழக்கை மத்திய அரசின் கோரிக்கையின் படி, அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
உரிமத்தை ரத்து செய்துள்ள ஃபிபா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.