ECLGS: ஹாஸ்பிடாலிட்டி, சுற்றுலா துறைக்கு 50000 கோடி கூடுதல் ஒதுக்கீடு..!

கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டு எடுக்க மத்திய நிதியமைச்சகம் அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் மூலம் பாதிப்படைந்த துறை சார்ந்த நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று வர்த்தகத்தை மீட்டு எடுக்க உதவியது.

இத்திட்டம் மூலம் பல நிறுவனங்கள் திவாலாவதில் இருந்து தப்பித்து மீண்டு வந்தது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை மேம்படுத்தவும் பயன்பட்டது மறக்க முடியாது.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது முக்கியமான துறைக்கு 50000 கோடி ரூபாயை புதிதாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ECLGS திட்டம்

ஹாஸ்பிடாலிட்டி, பயணம் மற்றும் சுற்றுலா துறைகளுக்காக ரூ.50,000 கோடி மதிப்பிலான நிதியை அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்திற்கு (ECLGS) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பல துறைகளை மீண்டு வந்தாலும் ஹாஸ்பிடாலிட்டி, பயணம் மற்றும் சுற்றுலா இன்னும் முழுமையாக மீண்டு வர முடியாமல் உள்ளது.

5 லட்சம் கோடி

5 லட்சம் கோடி

இந்த நிலையில் இத்துறைக்கான ஒட்டுமொத்த ஈசிஎல்ஜிஎஸ் ஒதுக்கீடு 4.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து தற்போது ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.

அனுராக் தாக்கூர்
 

அனுராக் தாக்கூர்

பயணம், சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறைக்கான அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் வரம்பை கூடுதலாக ரூ.50,000 கோடியாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார். மேலும் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்காக, கூடுதல் உத்தரவாதம் வழங்கப்பட இந்த ஆண்டு 7,500 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும் என்றும் கூறினார்.

கடன்கள்

கடன்கள்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை, ECLGS இன் கீழ் சுமார் ரூ.3.67 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்ள இத்துறைக்கான ECLGS ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi Govt enhances ECLGS scheme for travel, hospitality sector by Rs 50,000 cr to totally 5 lakh crore

Modi Govt enhances ECLGS scheme for travel, hospitality sector by Rs 50,000 cr to totally 5 lakh crore ECLGS: ஹாஸ்பிடாலிட்டி, சுற்றுலா துறைக்கு 50000 கோடி கூடுதல் ஒதுக்கீடு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.