தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கைத்தொழில் அமைச்சின் நிதியுதவியுடன் பதுளை ஊவபரணகம பிரதேச செயலகத்தில் கைப்பைகள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி பட்டறை அண்மையில் இடம்பெற்றது.
இப்பயிற்சி மூன்று நாட்கள் இடம்பெற்றன. வங்கிக் கடன் பெறும் வசதியின் கீழ் சுய தொழிலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் முனைவோர் அலுவலர் பி.வி.சி.எம். திருமதி வசந்தி மற்றும் ஊவபரணகம தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு அதிகாரி ஈ.எம். திருமதி நிலாந்தி ஏக்கநாயக்கவின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த பயிற்சி வழங்கப்பட்டது.