ரூ.215 கோடி மெகா மோசடி..!- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்கியது எப்படி..?

பல்வேறு கால கட்டங்களில் நூதன மோசடிகள் விதவிதமான வடிவங்களில் நடைபெற்று கொண்டு உள்ளன. இவ்வகையில் ரூ.215 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ்.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை இயக்குனரகம். அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் அவர்எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர், இரட்டை இலை சின்னத்துக்காக அதிமுகவினரும், டிடிவி தினகரன் இடையே கடும் போட்டி நிலவியது.அப்போது இடைத்தரகராக செயல்பட்டு சின்னத்தை மீட்க டெல்லி குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். 2017 ஆம் ஆண்டு டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு , முதலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளஇவர் மீது 21க்கும் அதிகமான மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கு முன்னதாக ரோகினிசிறையில் இருந்தபடியே, பிரபல தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் ரூ. 215 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டார். சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க உதவுவதாக கூறி, பணம் பெற்றதாக அதிதியே புகார் அளித்திருந்தார். சிறையில் இருந்தபடியே அவரது மனைவியும், நடிகையுமான லீனா மரியா மூலம்மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவரும் கைது செய்யப்பட்டுடெல்லி திகார் திறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சுகேஷுடன் தொடர்பில் இருந்தபாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் விசாரணை வளையத்துக்குள் வந்தார்.பரோலில் வெளியே வந்த சுகேஷுடன், நடிகை ஜாக்குலின் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியது நிருபனம் ஆகியுள்ளது. அவரைகாதலிப்பதாகக் கூறி விலையுயர்ந்த தங்க, வைர நகைகள் ஆகியவற்றுடன் கூப்பர் கார் ஒன்றையும் நடிகைக்கு சுகேஷ் பரிசளித்திருக்கிறார்.. அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் பணத்தை அள்ளி செலவழித்திருக்கிறார்.இந்த வக்கு தொடர்பாகஜாக்குலினிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரத்திற்கும் மேல்விசாரணை நடத்தியுள்ளது.

அப்போது சுகேஷிடம் பெற்ற கூப்பர் காரை திருப்பி ஒப்படைத்துவிட்டதாகவும், விலை உயர்ந்த கைப்பைகள், காலணிகள், வைர நகைகள், தங்க பிரேஸ்லெட்டுகள் ஆகியவற்றையெல்லாம் பரிசாக பெற்றதும்தெரியவந்தது.இதனையடுத்து ரூ.215 கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட சுகேஷுக்கு எதிரான வழக்கில் அவரது கூட்டாளியான நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறையினர் அவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை இன்று டெல்லி நீதிமன்றத்தில்தாக்கல் செய்தனர்.அவரும் தற்போது குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் விரைவில் கைதவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சம்பவம் இந்திய திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.