செம்ம… இலவசமாக உங்க வீட்டுக்கு தேடி வரும் வங்கி சேவை; எஸ்.பி.ஐ அசத்தல் அறிவிப்பு

கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீடு தேடிவரும் இலவச வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை பெற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பார்வை குறைபாடு கொண்டவர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எஸ்பிஐ வங்கி கிளைக்கு உள்பட்ட 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கும் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வசதி மாதத்துக்கு மூன்று முறை வழங்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த வசதியை பெற எஸ்பிஐயின் யோனோ செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இல்லையென்றால் பாரத் ஸ்டேட் வங்கியின் பதிவு செய்யப்பட்ட முற்றிலும் இலவசமான 1800 1037 188 அல்லது 1800 1213 721 இந்த எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இல்லம் தேடிவரும் வங்கி சேவையில் கிடைக்கும் சேவைகள் என்னென்ன?

  1. பணம் எடுப்பது
  2. பணம் டெபாசிட்
  3. காசோலை அளிப்பது
  4. காசோலை சிலிப் பெறுதல்
  5. படிவம் 15 கிடைக்கும்
  6. வங்கி வரைவோலை
  7. டெபாசிட் தொடர்பான சேவைகள்
  8. வாடிக்கையாளர்கள் கேஓய்சி சேவைகள்
  9. முகப்பு வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட சேவைகள்
  10. லைப் சான்றிதழ் பெறுதல்

எஸ்பிஐ வங்கியின் வீடு தேடிவரும் சேவையின் முக்கிய அம்சங்கள்
முதலில் வீடு தேடிவரும் வங்கி சேவை தொடர்பாக வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் முகப்பு வங்கியில் தொடர்பு கொள்ள வேண்டும்.
ஓரு நாளைக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பது மற்றும் ரொக்கம் டெபாசிட் உள்ளிட்டவை என வரம்புகள் உள்ளன.
நுpதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். இந்தச் சேவைக்கு ஜிஎஸ்டி உண்டு.
காசோலை திரும்ப பெறுதல் உள்ளிட்ட சேவைகள் அனுமதிக்கப்படும்.
இந்த சேவைகள் ஒரு நாளைக்குள் முடிக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.