உயர்ந்து வரும் கொரோனா தொற்று..! – உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் அதிர்ச்சி தகவல்..!

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்பொழுது வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 59.9 கோடியாக அதிகரித்துள்ளது

உலகம் முழுவதும் ஏறக்குறைய சுமார் 596,934,012 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,459,290 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 570,935,850 பேர் மீண்டனர் என்றும் தெறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 19,538,872 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94,869,936 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,063,087 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 90,158,070 என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,201,280 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 681,828 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 33,087,797 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,284,135 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 527,098 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 43,638,844 என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலின் இந்த அதிகரிப்பு உலக மக்களை பீதி அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.