ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் ஆப்பு..! முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை..!

ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆன்லைன் ரம்மி ஆப்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் பல்வேறு மக்கள் அவதிக்கு உல்லாகும் சூழல் உருவாகி உள்ளது. சிலர் ரம்மி ஆப்களில் தங்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையும் உருவாகியுள்ளது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது.

ஆன்லைன் ரம்மியை தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் ஏராளமானோர் கோரிக்கை விடுத்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டத் துறை, காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்த முக்கிய முடிவுகள் நாளை எடுக்கப்படும் என்றும் நாளை இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 20 பேர் தற்கொலை செய்து பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.இதில் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சமீப காலங்களில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த அவசியம் தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி தமிழக அரசால் தடை செய்யப்பட்டால் அதை வரவேற்க பொதுமக்கள் தயாராக உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.