மும்பை
:
அட்லி
இயக்கத்தில்
உருவாகி
வரும்
ஜவான்
திரைப்படத்தில்
விஜய்
சேதுபதி
நடிக்கும்
கதாபாத்திரம்
குறித்த
தகவல்
வெளியாகி
உள்ளது.
கடந்த
4
ஆண்டுகளாக
நடிகர்
ஷாருக்கான்
நடித்த
எந்த
படமும்
வெளியாகாத
நிலையில்,
பதான்,
ஜவான்
மற்றும்
டன்கி
என
அடுத்தடுத்து
3
படங்கள்
வெளியாக
உள்ளது.
சமீபத்தில்
ஷாருக்கான்
மாதவன்
நடித்த
ராக்கெட்டரி
மற்றும்
லால்
சிங்
சத்தா
ஆகிய
படங்களில்
கேமியோ
ரோலில்
மட்டுமே
வந்து
ரசிகர்களை
மகிழ்வித்தார்.
ஷாருக்கான்
இயக்குநர்
ஆனந்த்
எல்
ராய்
இயக்கத்தில்
ஷாருக்கான்,
கத்ரீனா
கைஃப்,
அனுஷ்கா
ஷர்மா,
நட்புக்காக
சல்மான்
கான்
என
கடந்த
2018ம்
ஆண்டு
வெளியான
ஜீரோ
திரைப்படம்
200
கோடி
பட்ஜெட்டில்
உருவான
நிலையில்,
மிகப்பெரிய
தோல்வியை
சந்தித்தது.
அதன்
பிறகு
கொரோனா
பிரச்சனை,
மகன்
போதை
பொருள்
வழக்கில்
கைதானது
போன்ற
காரணங்களால்
ஷாருக்கான்
எந்த
படத்திலும்
கமிட்டாகவில்லை.
ஜவான்
நல்ல
கதை
மற்றும்
நேர்த்தியான
திரைக்கதை
தான்
வெற்றிக்கு
முக்கியம்
என
நினைத்த
ஷாருக்கான்
இயக்குநர்
அட்லியிடம்
கதை
கேட்டு
அட்லியின்
படத்திற்கு
சம்மதம்
தெரிவித்தார்.
தற்போது
அட்லி
இயக்கத்தில்
ஷாருக்கான்
நடிக்கும்
ஜவான்
படத்தின்
படப்பிடிப்பு
புனேயில்
தொடங்கி,
மும்பை
சுற்றுவட்டார
பகுதிகளில்
நடைபெற்று
வருகிறது.
மேலும்
இந்த
படத்தின்
போஸ்டர்கள்
மற்றும்
டீசர்
வெளியாகி
நல்ல
வரவேற்பை
பெற்றது.
ஷாருக்கான்
இரட்டை
வேடத்தில்
இந்தப்
படத்தில்
ஷாருக்கானுக்கு
ஜோடியாக
நயன்தாரா
நடிக்கிறார்.
பிரியாமணி,
யோகிபாபு,
உள்ளிட்ட
தமிழ்
திரையுலகைச்
சேர்ந்த
பலரும்
இந்தப்
படத்தில்
நடித்து
வருகின்றனர்.
இந்தப்
படத்தில்
நயன்தாரா
விசாரணை
அதிகாரியாகவும்,
ஷாருக்கான்
இரட்டை
வேடத்திலும்
நடிக்க
உள்ளனர்.
படம்
அடுத்த
ஆண்டு
ஜூன்
2-ம்
தேதி
அன்று
திரையரங்குகளில்
வெளியாகும்
என
அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதிக்கு
என்ன
ரோல்?
இந்தி,
தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்
மற்றும்
கன்னடம்
ஆகிய
மொழிகளில்
படம்
வெளியாக
உள்ள
இந்தப்
படத்தில்
வில்லனாக
நடிக்க
தெலுங்கு
நடிகர்
ராணாவிடம்
பேச்சுவார்த்தை
நடத்தப்பட்ட
நிலையில்
அவர்
மறுத்துவிட்டதை
அடுத்து,
ஜவான்’
படத்தில்
வில்லன்
கதாபாத்திரத்தில்
நடிகர்
விஜய்
சேதுபதி
நடிக்க
உள்ளதாக
தகவல்கள்
பரவின.
இதுகுறித்த
அதிகாரப்பூர்வ
தகவல்
வெளியாகாத
நிலையில்,
தனியார்
தொலைக்காட்சி
நடத்திய
சுதந்திர
தினவிழா
சிறப்பு
நிகழ்ச்சியில்
கலந்து
கொண்ட
விஜய்
சேதுபதி,
ஜவான்
படத்தில்
வில்லனாக
நடிப்பதை
உறுதிப்படுத்தினார்.