இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்தமை தொடர்பில் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்நாண்டஸ் குற்றவாளியாக பெயரிடப்பட்டார்.
மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் (இந்தியன் நாணய பெறுமதிபடி) பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர்.
மேலும் படிக்க >>>இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்த இலங்கை நடிகை
2 இலங்கைக்கு மீ்ண்டும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.
இதனால் இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17000ஐத் தாண்டியுள்ளது.
மேலும் படிக்க >>>ரணில் அரசாங்கத்திற்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியானது! பெருகும் அந்நிய செலாவணி
3 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக கூறியுள்ளார் என அவரது உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>கோட்டாபயவின் இலங்கை வருகை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள உதயங்க வீரதுங்க
4 கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலை மையப்படுத்திய சர்ச்சைகள் வலம் வருவதை பரவலாக அறிய முடிகிறது.
ஒரு பக்கம் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் – 5 இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதை தடுக்குமாறு இந்திய தரப்பிலிருந்து வந்த அழுத்தம், எனினும் மறு பக்கம் கப்பலை அனுப்பியே தீருவதாக சீனாவின் பிடிவாதம்.
மேலும் படிக்க >>>இலங்கையில் நங்கூரமிடப்பட்ட கப்பல்!
5 டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>>பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
6 மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை மேற்கோள்காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நந்தலால் வீரசிங்கவை மேற்கோள் காட்டி பணவீக்கம் தொடர்பாக சமூக ஊடக தளங்களில் பரவி வரும் புதிய அறிக்கை குறித்து இவ்வாறு விளக்கம் அளிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>>சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை! இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்
7 கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு இராணுவத்திற்கு உத்தரவிட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, போராட்டக்காரர்களின் கோரிக்கையின்படி அவர் செயற்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>>மே 9 கலவரம்! இராணுவத்திற்கு உத்தரவிட விரும்பாத கோட்டாபய
8 போலியாக விமான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கனேடிய கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>கனேடிய கடவுச்சீட்டை பெற காத்திருப்போருக்கான அறிவித்தல்
9 கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.
மேலும் படிக்க >>>கொழும்பில் பாரிய போராட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு
10 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் பொது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கிய “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும் காலங்களில் அங்கு இருக்காது என நகர அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
மேலும் படிக்க >>>இரத்து செய்யப்படும் கோட்டாபயவின் திட்டம்! நடைமுறைக்கு வரும் தடை