அதிமுகவிலிருந்து
நீக்கப்பட்டதை எதிர்த்தும் பழனிசாமி அதிமுக பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்தும் இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஓபிஎஸ் மனு விசாரனைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் “ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும்” என உத்திரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில்”இதயதெய்வம் புரட்சிதலைவி ஜெயலலிதா அம்மா, இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஐயா ஆகிய இருபெரும் தலைவர்களின் பூத உடல் மறைந்தாலும், அவர்களின் ஆன்மா எதோ ஒரு ரூபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும் அதன் உண்மை தொண்டர்களையும் கண் இமை போல காப்பாற்றி, வழி நடத்தும் என்பதற்கு இன்று உயர் நீதி மன்ற நீதி அரசர் ஐயா உயர்திரு ஜெயச்சந்திரன் அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினால் நிரூபணம் ஆகியுள்ளது. வெற்றி நமதே!”
இவ்வாறு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது இணையத்தில் பரவி அரசியல் தலைவர்களின் பேசு பொருள் ஆகியுள்ளது. அதிமுகவில் பொதுக்குழுவிற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பின் இந்த டுவீட் பேசு பொருள் ஆகி உள்ளது .