சீன உளவு கப்பல்: அமைச்சர் பதில்| Dinamalar

பாங்காக்:இந்தியாவின் அண்டை நாடுகளில் நிகழும் மாற்றங்களினால் நாட்டின் பாதுகாப்பில் ஏற்படும் தாக்கங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நடக்கும் இந்தியா – தாய்லாந்து கூட்டு கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாங்காக் சென்றுள்ளார்.அப்போது இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ”அண்டை நாடுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்தில் ஏதேனும் தாக்கம் ஏற்படுகிறதா என்பதில் எங்களுக்கும் ஆர்வம் உள்ளது. அதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.