அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி.
* ஜூன் 23-ந்தேதி மற்றும் ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது.
* ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு அதிமுக எப்படி இருந்ததோ அதே நிலை நீடிக்கும்.
* பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது.
* ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது.
* இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது.
* அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கட்சி விதிகளின்படி அதிமுக பொதுக்குழுவை 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இந்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தீர்ப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, புதிதாக அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்காக ஒரு ஆணையரை நான் நியமிக்கிறேன் என்று தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டிய ஆகவேண்டும் என்பதை ஓபிஎஸ் தரப்பினர் மறந்துவிட்டனர்.
மேலும், பொதுக்குழு உறுப்பினர்களின் பேராதரவு எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதால், கூட்டப்படும் பொதுகுழுவுக்கு ஒரு ஆணையரை நீதிபதி நியமிக்க உள்ளார்.
ஆக, எடபடிக்கு தற்போது இருக்கும் ஆதரவு பொதுக்குழு கூடும் போதும் இருக்கும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் இடைக்கால பொதுச்செயலராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்க்கு சுமார் 3 அல்லது 4 மாதங்கள் போதுமானது.
ஆனால். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தால், இந்த வழக்கு முடிய பல மாதம் ஆகலாம். அது ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவே முடியும் என்று அரசியல் விமரிசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.