திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற கோயிலில் கடந்த வருடம் திருடப்பட்ட 5 சிலைகள் சமீபத்தில் கண்டறியப்பட்ட நிலையில், கோயிலில் ஓராண்டு காலமாக சிலைகள் கிடைப்பதைற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
வடமதுரை அருகில் இருக்கின்ற கோயிலில் வேலை செய்த பூசாரிகளைக் கட்டி போட்டு கத்தி முனையில் மிரட்டி 5 உலோக சிலைகள் கடத்தப்பட்டது. இந்த வழக்கில் நான்கு பேரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு சிலைகளை பத்திரமாக மீட்டனர்.
இத்தகைய நிலையில், காணாமல் போன சிலைகள் கிடைக்க, சிலைகள் இருந்த இடங்களில் ஓராண்டு காலமாக விளக்கேற்றி வைத்து சிறப்பு பூஜைகள் மேற்க்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அந்த சிலைகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.