மோகனூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (40). மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியை அடுத்த ஆண்டாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேல்முருகன் பணிபுரிந்து வந்தார். அலுவலகத்திலேயே தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்றபோது, அங்கு அலுவலக கதவு திறந்து கிடந்தது. உள்ளே வேல்முருகன் மர்மமான நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து மோகனூர் போலீசார் சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
