கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த சில பொருட்களையும் எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கலவரத்தின் போது பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சங்கராபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரை அடையாளங் கண்டு கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.