அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீசெல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்பது உறுதியாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். அந்த இடத்திற்கு வேறு யாரும் இனி வர முடியாது, வரக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் முடிவு எடுத்து அதற்கு பதிலாக அதிமுகவை இரட்டை தலைமையாக கொண்டு வந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பொறுப்புகளை உருவாக்கினர்.
ஆனால், திடீரென்று எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக முடிவு எடுத்து ஒருங்கிணைப்பாளர் , இணைய ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பொறுப்புகளை தூக்கி எறிந்து விட்டு அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதற்காக எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து, பொதுக்குழுவை கூட்டி தனது ஆதரவாளர்களை வைத்து இடைக்கால பொதுச்செயலாளர் என்று தன்னை அறிவித்துக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.