இலங்கையில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வு


இலங்கையில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் விலை 45.17 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LankaPropertyWeb ஆல் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீட்டு விலைச் சுட்டெண்ணின் இரண்டாம் காலாண்டு (2Q) தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்கம், மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்த கட்டுமான செலவுகளே இவ்வாறு விலை அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வு | House Prices In Sri Lanka Hit Record Highs

மூலப்பொருட்களின் விலை உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பிழப்பு, அத்துடன் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் உயர் விலைகள், மார்ச் 2022 முதல் மக்களின் நடத்தையை மாற்றியுள்ளது.

மக்கள் வீடு கட்டுவதை விட வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க விரும்புகிறார்கள்.

மூலப்பொருட்களைப் பெறுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவையும் இந்த நடத்தைக்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021ம் ஆண்டின் 2ம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் வீடுகளின் ஒட்டுமொத்த விலைகள் பற்றிய ஆய்வில், விலைகள் 21.85 வீதம் அதிகரித்துள்ளது. இது அதே காலகட்டத்தில் 13.9 வீதம் உயர்ந்துள்ளது.

இலங்கையில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வு | House Prices In Sri Lanka Hit Record Highs

கொழும்பில் வீடுகளில் விலை சடுதியாக உயர்வு

இதற்கிடையில், கொழும்பில் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் 2021 இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2022 இரண்டாம் காலாண்டில் 32.9 வீதம் அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது கோவிட் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, LankaPropertyWeb இன் தரவுகளின்படி, விற்பனைக்கான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முதல் ஐந்து தேடல்கள் கொழும்பு 6, கொழும்பு 5, ராஜகிரிய, கொழும்பு 3, மற்றும் கொழும்பு 2 ஆகிய இடங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.