புதுச்சேரி : ‘ தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், இம்மாதம் 31ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்’ என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புபவர்கள், ஆக. 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை https://puducherry-dt.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.பட்டாசு விற்பனை செய்யப் போகும் இடத்தின் வரைபடம், இடத்தின் உரிமை தொடர்பான பத்திரங்கள், ஆதார், வாக்காளர் அட்டை, புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பித்த பிறகு, விண்ணப்ப எண், குறிப்பு எண் கொண்ட ஒப்புகை ரசீதை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாடகை இடமாக, கடையாக இருப்பின் வாடகை பத்திரம், உரிமையாளரின் ஆட்சேபனை இல்லை என்ற நோட்டரி பத்திரம், மின் ரசீது, தண்ணீர் ரசீது இணைக்க வேண்டும்.கடைக்கான வரைபடத்தில் பட்டாசு வைத்துக் கொள்ளும் அளவு, கடைக்கு செல்வதற்குரிய வழி, சுற்றியுள்ள சாலைகள், கடையை சுற்றி உள்ள பிற கடைகள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பம் தொடர்பான சந்தேகம் அல்லது உதவிக்கு இந்த ஒப்புகை ரசீதை கண்டிப்பாக காட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement