சென்னை வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் குடோன் உள்ளது. இதன் அருகிலேயே பிளைவுட் குடோன், டைல்ஸ் குடோனில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் உள்ளன. அதன்படி இங்கே பிளைவுட்ஸ், சமையல் எண்ணெய் மற்றும் டைல்ஸ் ஆகியவற்றை தனியார் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 9.45 மணியளவில், எண்ணெய் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் பிளைவுட் குடோனில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து மளமளவென எண்ணெய் கிடங்கு மற்றும் டைல்ஸ் கிடங்குக்கு பரவியது. இதன் காரணமாக வானுயர தீ எரிந்ததில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இங்குள்ள குடோன்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளாதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

எண்ணெய் குடோன் அருகே எண்ணெயுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டேங்கர் லாரிகளிலும் தீப்பற்றியதால் அந்த லாரிகள் கொழுந்து விட்டு எரிந்தன. அருகிலிருந்த பர்னிச்சர், டைல்ஸ் குடோன்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது.

இதற்கிடையே மதுரவாயல், வானகரம், போரூர் பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தீ விபத்து ஏற்பட்ட வானகரம் பகுதியில் கனமழை பெய்யத் தொடங்கியதால் தீயணைக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.