8 யுடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை| Dinamalar


புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு யுடியூப் சேனல் உட்பட 8 சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை உள்ளிட்டவை குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேனல்களுக்கு 114 கோடி பார்வைகளும், 73 ஆயிரம் சந்தாதாரர்களும் உள்ளனர். இந்த சேனல்கள் இந்தியாவிற்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பி வந்தது. முன்னதாக கடந்த ஏப்., மாதம் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 சேனல்கள் உட்பட 16 சேனல்களை இதே காரணங்களுக்காக மத்திய அரசு தடை விதித்திருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.