இணைந்து சேயல்படுவோம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த ஊருக்கு புறப்படுவதற்கு முன்பாக சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை எம்ஜிஆர் தொண்டர்களால்,  தொண்டர்களுக்காக உருவாக்கினார். எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை, அவரை யாராலும் வெல்ல முடியவில்லை.

எம்ஜிஆர் மறையும்போது இருந்த 17 லட்சம் உறுப்பினர்களை, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்தை வைத்திருந்தார். கழகம் ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியாகத் தேர்தலைச் சந்தித்தபோது தமிழகத்தில் எந்த சக்தியும் அதிமுகவை வெல்ல முடியாத நிலை இருந்தது. 

தற்போது சிறிய சிறிய பிரச்சனைகளாலும் , எங்களுக்குள் கருத்து வேறுபாட்டாலும் திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது. எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். 

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் , எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கழக ஒற்றுமையையே அனைவருக்கும் பிரதான கொள்கையாக இருக்க வேண்டும்.
நான்கரை ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடியுடன்  பயணித்தோம். மீண்டும் அந்த நிலை வரவேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்கை. 

தர்மயுத்தத்திற்குப் பிறகு கூட்டுத் தலைமைப்படி, குறையே இல்லாமல் இருவரும் இணைந்து பயணித்தோம். எம்ஜிஆர் எண்ணத்தில் உருவான இயக்கத்தை தலைமை தாங்குவோர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் சட்ட விதிப்படி நடந்தது. இந்திய தேர்தல் ஆணையமும் அதை ஏற்றது. 

எங்களது எண்ணம், செயல்,  இணைப்பு…இணைப்பு…இணைப்புதான். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் எங்களுக்கு  இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்..அவை தொலையட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும். கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணைக்கலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் ”சின்னம்மாவும் , டிடிவி தினகரனும் இருக்கின்றனர் ” எனக் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.