பருவநிலை மாற்றம் காரணமாக சீனாவில் 1961-ம் ஆண்டுக்கு பிறகு நடபாண்டில் அதிக அளவிலான வெயில் பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை 40 டிகிரி செல்சியஸ்(104*F) வெப்பம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக நிலவும் வறட்சி காரணமாக சிச்சுவான் மற்றும் மத்திய சீன பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அந்த பகுதியில் உள்ள கால்நடை, விவசாய பயிர்களுக்கு போதிய நீர் இல்லாததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கால்நடைகளை தற்காலிகமாக நீர் உள்ள பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக வீடு, அலுவலங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பட்டொளி வீசிய பாகிஸ்தான் கொடி; பாஜக ஆளும் மாநிலத்தில்..பரபரப்பு!
குறிப்பாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஆகஸ்ட் 21 வரை அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்திவிட்டு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த மாகாணத்தில் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த மக்கள் குளிர்ச்சியான பகுதியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட சீன மக்கள் குடிநீருக்காகவே அல்லோலப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தீயணைப்பு நிலைய வாகங்கள் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வறட்சி காரணமாக சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களோடு மக்களாக துபாய் இளவரசர்..! – ரயிலில் எடுத்த செல்பி வைரல்..!!
மேற்கு பசிபிக் துணை வெப்ப மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக ஆசியாவின் பெரும் பகுதி தீவிர வெப்ப பாதிப்பிற்கு ஆளாகலாம் என்று ஆஸ்திரேலிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான CSIRO எச்சரிக்கை விடுத்துள்ளது.