அனில் அம்பானி-க்கு 2 வருடத்திற்கு பின் விடிவுகாலம்.. கைகொடுத்த முகேஷ் அம்பானி..!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி கடந்த 10 வருடத்தில் வர்த்தகம், சொத்து என அனைத்தையும் இழந்தது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய கடன் பிரச்சனையிலும் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில் அனில் அம்பானி-யை காப்பாற்றும் வகையில் பல வருட பகையை மறந்து அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானி முன் வந்த நிலையிலும் 2 வருடத்திற்குப் பின்பு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இண்பராஸ்டக்சர் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

முகேஷ் அம்பானி-க்கு பயம் காட்டும் டிமார்ட் ராதாகிஷன் தமனி..!

அனில் அம்பானி

அனில் அம்பானி

அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்பராஸ்டக்சர் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தும் 2 வருடத்திற்குப் பின்பு இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் NOC கடிதம் கொடுத்து ஒப்புதல் அளித்துள்ளது.

டெலிகாம் சொத்துக்கள்

டெலிகாம் சொத்துக்கள்

அனில் அம்பானி நிறுவனத்தின் டெலிகாம் சொத்துக்களைக் கைப்பற்றப் போட்டியில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் அண்ட் ப்ராபெர்டீஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.

NCLT ஒப்புதல்
 

NCLT ஒப்புதல்

இந்நிலையில் NCLT ஒப்புதல் அளித்துச் சுமார் 2 வருடத்திற்குப் பின்பு அனில் அம்பானி நிறுவனத்தின் டெலிகாம் சொத்துக்களைக் கைப்பற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்குக் கடன் கொடுத்த நிதி நிறுவனங்களின் தலைமையிலான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா NOC சான்றிதழ் அளித்துள்ளது.

escrow கணக்கு

escrow கணக்கு

இதன் மூலம் ரிலையன்ஸ் இண்பராஸ்டக்சர் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கான பணத்தை escrow கணக்கில் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்பராஸ்டக்சர் டெலிகம்யூனிகேஷன்ஸ் ஒப்புதல் அளிப்பின் கைப்பற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

 ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் இண்பராஸ்டக்சர் டெலிகம்யூனிகேஷன்ஸ் (RITL) நிறுவனம் என்பது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம். இதில் ஆர்காம் கொடுக்க வேண்டிய 41,055 கோடி ரூபாய் கடனில் RITL சுமார் 13,483 கோடி ரூபாய் அளவிலான கடனை தன் பெயரில் வைத்துள்ளதாக NCLT தெரிவித்துள்ளது.

30 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்

30 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குச் சுமார் 30 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடன் உத்தரவாதங்களை அளித்துள்ளது. இவை அனைத்தும் ரிலையன்ஸ் இண்பராஸ்டக்சர் டெலிகம்யூனிகேஷன்ஸ் சார்ந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anil Ambani RITL got fresh hope after 2 years, Mukesh Ambani big help to his brother

Anil Ambani RITL got fresh hope after 2 years, Mukesh Ambani big help to his brother அனில் அம்பானி-க்கு 2 வருடத்திற்குப் பின் விடிவுகாலம்.. கைகொடுத்த முகேஷ் அம்பானி..!

Story first published: Thursday, August 18, 2022, 13:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.