இந்தியா ரஷ்யா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் ரத்தத்தினை வாங்குவதாக, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடுமையான பிரச்சனை நிலவி வரும் நிலையில், உக்ரைன் இந்தியாவில் இருந்து நடைமுறை ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருவதை உக்ரைன் சுட்டிகாட்டியுள்ளது.
‘வின்டர் இஸ் கம்மிங்’ 3 நாடுகளை நம்பி வண்டி ஓட்டும் ஐரோப்பா.. ரஷ்யா செய்த வினை..!
இந்தியா வலு சேர்த்துக் கொண்டுள்ளது
உக்ரைன் மிக மோசமான நிலையில் ரஷ்யாவினை எதிர்த்து போராடி வருகின்றது. ஆனால் இந்தியாவோ தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்துக் கொண்டுள்ளது. இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவது, உக்ரைன் மக்களின் ரத்தத்தினை தள்ளுபடியில் வாங்குகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஆதரவை எதிர்பார்க்கிறோம்
இந்தியா வாங்கும் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய்-லும் உக்ரைனின் ரத்தம் உள்ளது. நாங்கள் இந்தியாவுக்கு நட்புறவுடனும், வெளிப்படையாகவும் இருக்கிறோம். இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுவதை ஆதரித்தோம். ஆக இந்தியாவிடம் இருந்து நாங்கள் நடைமுறை ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.
உக்ரைன் இந்தியா இணைந்து நிற்க வேண்டும்
இந்தியா உக்ரைன் இரண்டுமே ஜனநாயக நாடுகள். ஆக இரண்டு நாடுகளும் ஒன்றோடொன்று இணைந்து நிற்க வேண்டும். வலுவான இந்தியாவின் தேவையால் ரஷ்யா மீண்டு வருகின்றது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக இந்தியாவின் வெளி விவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர், என்ணெய் மற்றும் கேஸ் விலைகள் நியாமின்றி அதிகமாக இருப்பதாக கூறியவர், உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைகு பின்னர் இது சவாலாக மாறியுள்ளதாகவும் கூறியிருந்தார்.. நாங்கள் தற்காப்பு வழியில் செல்லவில்லை. நாங்கள் வெளிப்படையாக உள்ளோம்.
ஜெய்சங்கரின் கருத்து
எங்கள் மக்களின் தனி நபர் வருமானம் என்பது வெறும் 2000 டாலர்கள் தான் ஆக அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க முடியாது. ஆக எங்களுக்கு கிடைக்கும் சிறந்த ஒப்பந்தத்தினை, எங்கள் மக்களுக்காக பெறுவது எங்களின் தார்மீக கடமை. இதில் ஓளிவு மறைவு எதுவும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்தியா
ரஷ்யா உள்பட மற்ற நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் பெறுவதில் புத்திசாலிதனமாக இருக்க முயற்சி செய்யவில்லை. இந்தியாவின் நிலைப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை உக்ரைனை ஆச்சரியப்படுத்தவில்லை. அதனை உக்ரைன் அமைச்சரே ஒப்புக் கொண்டது நினைவுகூறத்தக்கது.
India buys Ukraine’s blood: dmytro kuleba Comment on buying oil from Russia
India buys Ukraine’s blood: Comment on buying oil from Russia/ இந்தியா உக்ரைனின் ரத்தத்தினை வாங்குகிறது.. ரஷ்யா எண்ணெய் குறித்து ஆவேசம்..!