இலங்கையில் பாலியல் தாக்குதலுக்காளான பிரித்தானிய இளம்பெண் ஒருவருடைய வழக்கை மூடி மறைக்க பொலிசார் முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்தப் பெண்.
தன் மீதான தாக்குதல் தொடர்பாக தான் கொடுத்த அறிக்கை உண்மையானதல்ல என எழுதிக்கொடுக்குமாறு கூறி, தன்னை பொலிசார் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார் அவர்.
பிரித்தானிய சமூக ஆர்வலரான Kayleigh Fraser, இலங்கைக்கு மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காகச் சென்றிருந்த நிலையில், தான் பாலியல் தாக்குதலுக்காளாக்கப்பட்டதாக புகாரளித்திருக்கிறார்.
இந்நிலையில், தன்னிடம் பேச விரும்புவதாகக் கூறி வெலிகம (Weligama) பொலிசார் தன்னை அழைத்ததாகவும், தான் பொலிஸ் நிலையம் சென்றபோது அங்கிருந்த நான்கு பொலிசாரில் மூவர் தன்னைத் தாக்கியதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார் Kayleigh.
தான் முன்பு கொடுத்த அறிக்கை உண்மையானதல்ல என்று கூறும் ஒரு கடிதத்தை எழுதிக்கொடுக்குமாறு தன்னை பொலிசார் வற்புறுத்தியதாகவும், தான் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளா Kayleigh.
வெகுநேரம் காக்கவைக்கப்பட்ட தான் அழுததாகவும், அதைக் கண்ட பொலிசார் தன்னைக் கேலி செய்ததாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார் Kayleigh.
தனக்கள் சொல்வதுபோல கடிதம் எழுதித்தராவிட்டால் இலங்கையில் பாதுகாப்பாக இருக்கமுடியாது என தனக்குக் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
இதற்கிடையில், இலங்கையில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் குறித்து விமர்சித்ததற்காக, Kayleighயின் பாஸ்போர்ட்டை பொலிசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விவரங்களுக்கு… https://www.tamilguardian.com/content/police-laughed-and-mocked-me-british-national-details-her-harrowing-experience-sexual