அதானி உள்ளிட்ட பில்லியனர்களின் முதல் வேலை என்ன தெரியுமா.. சொத்து மதிப்பு எவ்வளவு?

பொதுவாக வாழ்வில் எல்லோரும் மேன்மேலும் வளர்ந்து வந்தாலும், அவரவர் முதல் வேலை என்பது மறக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். சம்பளமே குறைவாக இருந்தாலும் வேலையில் காட்டிய ஆர்வம், கற்றுக் கொண்ட விஷயங்கள் என பலவும் நம்மை மேன்மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.

நிச்சயம் முதல் வேலை என்பது பலருக்கும் ஒரு மறக்க முடியா அனுபவமாகவே இருக்கலாம்.

இன்று உலகளவில் பில்லியனர்களாக வலம் வந்து கொண்டு இருக்கும் முக்கிய புள்ளிகளின் முதல் வேலை என்ன?அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

17 வயதில் மில்லியனர், 30 வயதில் பில்லியனர்.. வியக்கவைக்கும் டெல்லி இவான் சிங்-ன் வளர்ச்சி..!

கெளதம் அதானி

கெளதம் அதானி

இந்தியாவின் இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் ஒருவரான கெளதம் அதானி, அதானி குழுமத்தின் தலைவராவர். இன்று ஏர்போர்ட் முதல் துறைமுகம், எரிபொருள், டெலிகாம் துறை, சுரங்கம், அடிப்படை உலோகங்கள் என பலவற்றிலும் கோலேச்சி வருகின்றார். இன்று இவரின் வருமானம் பல பில்லியன் டாலர்கள். இப்படிப்பட்டவரின் முதல் வேலை என்ன தெரியுமா? மகேந்திரா பிரதர்ஸ் நிறுவனத்தில் 1978ம் ஆண்டில் வைரம் பிரிக்கும் தொழிலாளியாக பணி புரிந்தவர். உலகின் 4வது பணக்காரராக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு 126 பில்லியன் டாலராகும்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இன்று சர்வதேச அளவில் மக்கள் விரும்பும் விலையுயர்ந்த கார்களில் ஒன்று டெஸ்லா. இந்த டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்கின் இன்றைய மாத வருமானம் 200 மில்லியன் டாலருக்கு மேல்.

இவரின் முதல் பணி 1983ல் சாப்ட்வேர் இன்ஜினியராக பணி புரிந்துள்ளார். ஆனால் இன்றோ டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்பட 6 நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் உள்ளார். இன்று இவரின் சொத்து மதிப்பு 253 பில்லியன் டாலராகும்.

 

ஜெப் பெசோஸ்
 

ஜெப் பெசோஸ்

அமேசானின் தலைவரும், நிறுவனருமான ஜெப் பெசோஸ், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் இகாமர்ஸ் வணிகத்தினை வெற்றிகரமாக செய்து வருபவர். இவரின் முதல் பணி மெக்டொனால்டில் பிரை குக் ஆக இருந்துள்ளார். இன்று உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருந்து வருகின்றார். இவரின் சொத்து மதிப்பு 165 பில்லியன் டாலராகும்.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், 1970ல் முதல் முதலாக கம்ப்யூட்டர் புரோகிராமராக (Computer Programmer for TRW) ஆக இருந்தவர். இன்று உலகின் 5வது பெரிய பில்லியனராக உள்ளார். இவரின் சொத்துமதிப்பு 121 பில்லியன் டாலராகும்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

பெர்க்ஷயர் ஹாத்வே என்ற நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வாரன் பஃபெட், உலகின் 7வது பணக்காரர் ஆவார். இவரின் இன்றைய சொத்து மதிப்பும் 103 பில்லியன் டாலராகும். இளம் வயதிலேயே வறுமையால் தவித்த இவர், குடும்பத்திற்காகவும் வாழ்வாதரத்திற்காகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பேப்பர் டெலிவரி செய்யும் டெலிவரி பாயாக 1944ல் இருந்தார். புத்தகங்கள் விற்பனையும் செய்துள்ளார். தனது 11 வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்தவர், சிறு வயதில் இருந்தே பங்கு சந்தையிலும் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க், இன்று உலகின் 17வது பணக்காரர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 65.8 பில்லியன் டாலராகும். இவரின் முதல் பணி 2006ல் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகும். இவரின் சம்பளம் 1 டாலர் என்றாலும், இழப்பீடுகள் பெரியளவில் வழங்கப்பட்டு வருகின்றன.

இவான் ஸ்பீகல் (Evan Spiegel )

இவான் ஸ்பீகல் (Evan Spiegel )

இவான் ஸ்பீகல் , ஸ்னாப்பின் (SNAP) தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவார். ஸ்னாப்பினை இவான் ஸ்பீகல் மற்றும் பாபி மர்பி ஆகியோர் 2011ல் தொடங்கினர். இவரின் சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலராகும். இவரின் முதல் பணி மார்கெட்டிங் – ரெட் புல் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார்.

 டிராவிஸ் கலானிக் (Travis Kalanick)

டிராவிஸ் கலானிக் (Travis Kalanick)

உபெரின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான டிராவிஸ் கலானிக்-ன் சொத்து மதிப்பு 2.8 பில்லியன் டாலராகும். இவரின் முதல் பணி வீட்டுக்கு வீடு கத்தி விற்பனை செய்தவதாகும். இன்று பெரும் பணக்காரர்கள் ஒருவர்.

ஆனந்த்  மகேந்திரா

ஆனந்த் மகேந்திரா

இந்திய தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா, மகேந்திரா குழுமத்தின் தலைவராவர். இவரின் சொத்து மதிப்பு 2.1 பில்லியன் டாலராகும். இவரின் முதல் பணி 1981ல் musco நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராக இருந்தவர். இன்று சர்வதேச அளவில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றார்.

திரும்பாய் அம்பானி

திரும்பாய் அம்பானி

மறைந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான திரும்பாய் அம்பானியின் முதல் பணி 1949ல், ஏமனில் கேஸ் ஸ்டேஷன் அட்டெண்டராக பணி புரிந்தார். அவரின் முதல் சம்பளம் 300 ரூபாய். ஆனால் இவரின் திறமையை பார்த்து அதே எரிபொருள் நிலையத்தில் மேலாளாராகவும் பதவி உயர்வு பின்னர் செய்யப்பட்டாராம். இவர் இறக்கும்போது 2022ல் இவரின் சொத்து மதிப்பு சுமார் 2.9 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

இன்று உலகமே தூக்கிக் கொண்டாடும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர். இவர் இறக்கும்போது இவரின் சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலராகும். இவரின் முதல் பணி 1974ல் வீடியோ கேம் டிசைனராகும். இளம் வயதிலேயே தாய் தந்தையை பிரிந்து தத்து கொடுக்கப்பட்டு வளர்ந்த ஸ்டீவ், இன்று உலகம் விரும்பும் ஆப்பிளின் தலைவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do you know what billionaires first job is? Who is on the list?

Do you know what billionaires first job is? Who is on the list?/அதானி உள்ளிட்ட பில்லியனர்களின் முதல் வேலை என்ன தெரியுமா.. சொத்து மதிப்பு எவ்வளவு?

Story first published: Thursday, August 18, 2022, 14:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.