4 வாரங்களில் கொரோனா இறப்பு விகிதம் 35% ஆக உயர்வு| Dinamalar

புதுடில்லி: உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் இணையதளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 வாரங்களில் இறப்புவிகிதம் 35% அதிகரித்துள்ளது.நாம் எல்லோரும் கொரோனா பெருந்தொற்று காலம் நீண்டு கொண்டே செல்வதால் சோர்வடைந்துள்ளோம். ஆனால் வைரஸ் சோர்வடையவில்லை. அதனால், நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது.

நீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் உடனே தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி இரண்டு தவணை செலுத்தி இருந்தாலும், பூஸ்டர் டோஸ் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் 15 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.