புதுடில்லி : நம் நாட்டில் நடக்கும் சிறுவர் – சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல் மற்றும் அவர்களை வைத்து ஆபாச படம் எடுக்கும் குற்றங்கள் குறித்து அமெரிக்கா அளித்து வரும் உளவு அறிக்கை வாயிலாக நம் போலீஸ் உட்பட அனைத்து விசாரணை அமைப்பினரும் குற்றவாளியை சுலபமாக சுற்றி வளைக்க முடிகிறது.
அமெரிக்காவில் என்.சி.எம்.இ.சி. எனப்படும் காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பு ‘ஆன்லைன்’ வாயிலாக சுரண்டலுக்கு ஆளாகும் சிறுவர் – சிறுமியர் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறது.நம் நாட்டில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்து இணைய வெளியில்பகிர்வது உள்ளிட்ட குற்றங்களை இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது.
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து வரும் புகார்களை ஆய்வு செய்து அது தொடர்பான உளவு அறிக்கையை என்.சி.எம்.இ.சி. தயார் செய்கிறது.இது நம் மத்திய அரசுடன் ஏற்கனவே செய்துள்ள ஒப் பந்தப்படி இந்த உளவு அறிக்கையை என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணகாப்பகத்திடம் பகிர்ந்து கொள்கிறது.
என்.சி.ஆர்.பி. இந்த தகவலை போலீஸ் அல்லது சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளுக்கு அனுப்புகிறது.கடந்த ஆண்டு இறுதி வரை 1 லட்சத்துக்கும்மேற்பட்ட உளவுஅறிக்கைகள் அளிக்கப்பட்டதாகவும் அது குற்றவாளிகளை சுற்றி வளைக்க பெரும் உதவியாக இருந்ததாகவும் அதிகாரிகள்தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement