இன்போசிஸ் ஒரிஜினல் கேங்ஸ்டர்.. பதறிப்போன நந்தன் நிலேகனி..!

இன்போசிஸ் இணை நிறுவனர், கோடீஸ்வர தொழிலதிபர், நாட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எனப் போற்றப்படும் நந்தன் நிலேகனி பல புதிய தொழில்நுட்பம், அறிவியல், பொருளாதார விஷயங்களில் அப்டேட் ஆக இருந்தாலும் மில்லினியல் ஸ்லாங்க்-ல் அப்டேட் ஆக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இன்போசிஸ் ஒரிஜினல் கேங்ஸ்டர் என்றதும் பதறிப்போய் விளக்கம் கேட்டு உள்ளார் நந்தன் நிலேகனி.

இந்த 3 பங்குகள் உங்களிடம் இருக்கா.. இல்லாட்டி வாங்கி வைங்க.. 15% லாபம் கொடுக்கலாம்!

 ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் இந்தியா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடும் போது, முன்னணி பத்திரிக்கையின் பேட்டியில் கலந்துக்கொண்ட ​​நந்தன் நிலேகனி-யின் பேச்சு தற்போது வைரலாகியுள்ளது.

​​நந்தன் நிலேகனி

​​நந்தன் நிலேகனி

67 வயதான ​​நந்தன் நிலேகனி, ஆகஸ்ட் 15 அன்று ஒளிபரப்பப்பட்ட நேர்காணலின் போது, ​​இந்திய பணியிடங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், உற்பத்தி, தொழில்நுட்பக் கொள்கைகள் மற்றும் கோவிட் தாக்கம் வரையிலான சிக்கல்கள் என பலவற்றை விவாதித்தார்.

இன்போசிஸ்
 

இன்போசிஸ்

இந்த நிலையில் ​​நந்தன் நிலேகனி-யிடம் செய்தியாளர் இன்போசிஸ் நிறுவனத்தை இந்திய தொழில்முனைவின் OG என குறிப்பிட்டார், அதுவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்த அவர் OG என்றதும் குழம்பினார்.

OG என்றால் என்ன

OG என்றால் என்ன

உடனே குறுக்கிட்ட நந்தன் நிலேகனி OG என்றால் என்ன என குழம்பிபோய் கேள்வி கேட்டார். இதற்கு செய்தியாளர் original gangster அல்லது Old School எனவும் இது இணையத்தில் பயன்படுத்தும் மொழி நடை என விளக்கினார்.

இன்போசிஸ் வளர்ச்சி

இன்போசிஸ் வளர்ச்சி

உடனே உணர்ந்துக்கொண்டு 40 வருட பயணம், 16 பில்லியன் டாலர் வருமானம், 3 பில்லியன் டாலர் அளவிலான பண புழக்கம், 80 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு என இன்போசிஸ் வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்திற்கும் ஒரிஜினல் நிர்வாகியான நாராயணமூர்த்திக்கு நன்றி என கூறினார்.

ஒரிஜினல் ஸ்டார்ட்அப்

ஒரிஜினல் ஸ்டார்ட்அப்

இந்தியாவில் இன்று பல ஸ்டார்ட்அப் இருந்தாலும் 40 வருடத்திற்கு முன்பு பல பேரின் சிறு சேமிப்பில் இருந்து உருவானது தான் இன்போசிஸ். தனது வாழ்நாள் சேமிப்பை மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து முதலீடு செய்த இன்போசிஸ் நிறுவனர்கள் இன்று பல கோடி ரூபாய் சொத்து மதிப்பை தாண்டி இந்திய பொருளாதார வளர்ச்சியின் தூண் ஆக விளங்கும் ஐடி துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Nandan Nilekani stumped on Infosys referred as the OG for entrepreneurship in India

Nandan Nilekani stumped on Infosys referred as the OG for entrepreneurship in India இன்போசிஸ் ஒரிஜினல் கேங்ஸ்டர்.. பதறிப்போன நந்தன் நிலேகனி..!

Story first published: Thursday, August 18, 2022, 18:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.