பார்த்தா, அர்பிதாவுக்கு காவல் ஆக.,31 வரை நீட்டிப்பு| Dinamalar

கோல்கட்டா: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது பெண் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரின் நீதிமன்ற காவல் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து , பார்த்தா சாட்டர்ஜி, அவருடைய நெருங்கிய பெண் கூட்டாளியான அர்பிதா முகர்ஜியை கைது செய்தனர். இவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று(ஆக.,18) வழக்கை விசாரித்த நீதிபதி ஆக.,31 வரை காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.