காபூல்: பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துவிட்ட நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. பலரது உயிர் ஊசலாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஒரு வருடமாகிறது.. இந்த காலகட்டத்தில் அங்குள்ள ஆப்கன் மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். பெண்கள் அதற்கு மேல் கதிகலங்கி போயுள்ளனர்.
ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், கண்டிஷன்கள், கெடுபிடிகளை பெண்கள் மீது திணித்து வருகிறார்கள்.. அதோடு அங்கு துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு உள்ளிட்டவை சரளமாக காணப்பட்டு வருகிறது.
தெருக்களில் துப்பாக்கி
அங்குள்ள தெருக்களில், சாதாரணமாக நடந்து போகும்போதுகூட, கையில் துப்பாக்கியை வைத்து கொண்டுதான் இந்த தாலிபன்கள் நடப்பார்களாம்.. நேற்றுகூட ஒரு மசூதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.. வழக்கம்போல், மசூதியில் நேற்றிரவு இஸ்லாமியர்கள் தொழுது கொண்டிருந்தனர்.. அந்த நேரத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.. தொழுகையில் இருந்தோரின் உடல்கள், அப்படியே தூள் தூளாக சிதறி வெடித்தன..
உடல் சிதறின
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அறிந்த பொதுமக்கள், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த குண்டுவெடிப்பிபில் குழந்தைகள் உட்பட சுமார் 31-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. இன்னும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்களாம்.. ஆப்கன் மக்கள் இந்த சம்பவத்தினால், அச்சமடைந்து உள்ளனர்.. குண்டு வெடிப்புக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்..
மார்க்கெட்
இப்படித்தான், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதியும், காபூலின் மார்க்கெட் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்தது.. இந்த குண்டுவெடிப்பிலும் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.. 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. மக்கள் கூடும் இடங்களாக பார்த்து, கடைவீதி, மசூதி என இந்த இடங்களையே குறித்து குண்டுவெடிப்பு நடந்து வருகிறது.. அதேபோல, சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக சந்திக்கும் நகரின் மேற்கு மாவட்டத்திலும் குண்டுவெடிப்பு நடந்தது..
சன்னி முஸ்லிம்
சன்னி முஸ்லிம் தீவிரவாத அமைப்பு தான் இதற்கு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.. ஆனாலும், நேற்றைய தினம், நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கன் அரசு, தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களில் பலர் சீரியஸாக இருக்கிறார்களாம்.. அதனால், உயிர் பலி அதிகமாகும் என்றும் அஞ்சப்படுகிறது. நடந்து வரும் சம்பவங்களை பார்த்து, ஆப்கன் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.