முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான்.
அதுவே பெண்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும். முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம்.
அந்தவகையில் பருக்களை எளியமுறையில் விரட்ட சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
image – medicalnewstoday
- வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலிமஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவவும்.
- அவரை இலை சாறு தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் குணமாகும்.
- அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்துவர முகப்பருக்கள் ஒழியும்.
- அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தடவி வர மறையும்.
- வெள்ளைப்பூண்டும், துத்தி இலையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தினசரி பரு மீது தடவ நீங்கும்.
- கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவிவர இரண்டு நாட்களில் பருக்கள் மறையும்.
- சந்தனம் முகத்தில அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ குணமாகும்.
- சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்துப் பற்றுப் போடலாம்.
- சந்தனக்கட்டையை எலும்பிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவலாம்.
- மரப்பாச்சிலை நீர்விட்டு கல்லில் மைய அரைத்து பரு மீது தடவிவர பருக்கள் மறையும்.
- ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவ குணமாகும்.
- கானாவாழை இலையை கசக்கி பூச விரைவில் நீங்கும்.
- மஞ்சத்தூள், சோற்றுக்கற்றாழை சேர்த்து அரைத்து பூச பரு மறையும்.
- துத்தி இலையை அரைத்து காடியில் கரைத்து முகப்பருக்கள் மீது தடவிவர பருக்கள் மறையும்.