கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை


மக்கள் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவில் வசிப்பதற்கு முயற்சித்து வருகின்றார்.

அதற்கமைய, அவர் அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் மூலம் வாய்ப்பு பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க குடியுரிமை

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை | What Is Rajapaksa In Sri Lanka

கோட்டாபயவின் மனைவியான அயோமா ராஜபக்ஷ இன்னும் அமெரிக்க குடியுரிமையுடன் இருப்பதால், முன்னாள் ஜனாதிபதி கிரீன் கார்ட் லொட்டரிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் இதற்கான விண்ணப்ப நடைமுறையை கடந்த மாதம் முதல் ஆரம்பித்துள்ளதாக உயர்மட்ட தகவல்களை ஆதாரம் காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளன.  

அமெரிக்காவில் நடவடிக்கை 

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை | What Is Rajapaksa In Sri Lanka

தற்போது தனது மனைவியுடன் தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள கோட்டாபய, குறைந்த பட்சம் நவம்பர் மாதம் வரை தாய்லாந்தில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இருந்த போதிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அவர் இலங்கை திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமையை  கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை ரத்துச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


you may like this video..



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.