பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்குள் நுழைந்த நபர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தனவின் வீட்டிற்குள் நுழைந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 25 வயதுடைய இளைஞரை கம்பஹா நள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரின் வீடு, அவரது அலுவலகம் மற்றும் அவரது சகோதரரின் வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்த சந்தேக நபர் (16.08.2022) லொலுவாகொடவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.