தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இன்று ரிலீஸானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படம் என்பதால், ரசிகர்களும் பெரிய அளவில் திரண்டு வந்து, படத்தைக் கொண்டாட காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறந்த பேம்லி என்டர்டெயின்ட்மென்ட் படமாக திருச்சிற்றம்பலம் இருந்தது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படம் சூப்பராக இருப்பதாக ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
பாரதி ராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, அனிரூத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தியேட்டரிலும் ரசிகர்கள் அமர்களப்படுத்தினர். குறிப்பாக தாய்க்கிழவி பாடலுக்கு நாற்காலிகள் மீது ஏறி குத்தாட்டம் போட்டனர். அவர்களை இன்னும் குஷிப்படுத்துவதற்காக சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டருக்கு அனிரூத்துடன் விசிட் அடித்தார் தனுஷ். அவரை பார்த்ததும் இன்னும் உற்சாகமடைந்த ரசிகர்கள், தியேட்டரில் குதூகலமடைந்தனர். இதன் விளைவாக, கொண்டாட்டம் எல்லை மீறி அந்த தியேட்டரின் ஸ்கீரின்களையெல்லாம் கிழித்து கொண்டாட்டத்தை அலங்கோலமாக மாற்றினர்.
DnA at #FansFortRohini celebrating #Thiruchitrambalam FDFS along with fans @dhanushkraja @anirudhofficial @sunpictures @RaashiiKhanna_ @priya_Bshankar @MenenNithya pic.twitter.com/sMpMg4etyI
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 18, 2022
இதனால், ரோகிணி தியேட்டரில் அடுத்தக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதேநேரத்தில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.