சாலையின் நடுவே மின்கம்பங்கள்., தமிழகத்தில் தொடரும் அவலம்.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொற்கை-பம்பப்படையூர் மற்றும் தென்னூர்-பட்டீஸ்வரம் சாலையை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது, தென்னூரில் பழைய சாலையின் ஓரத்தில் இருந்த 8 மின்கம்பங்கள் அகற்றப்படாமல் சாலை விரிவாக்க பணி முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், இப்பகுதியில் போக்குவரத்து அலுவலகம் உள்ளதால், நாள்தோறும் இச்சாலை வழியே நூற்றுக்கணக்கானோர் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் முன்னரே சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை சாலை ஓரம் அமைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக இருசக்கர வாகனத்தை வைத்திருக்கும் போதே, அதனை நடுவில் வைத்து புதிதாக சாலைகள் போடப்பட்டது. மேலும், அடிபம்பை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமல் சாலை போடப்பட்டது. இது போன்று சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்து வரும் நிலையில் தற்போது மின்கம்பங்களை அகற்றாமல் சாலைகள் போடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.