தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் ப்ரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தனுஷுக்கு கொடியில் ஜோடியாக நடித்த அனுபமா அடுத்ததாகஅதர்வா ஜோடியாக, ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பையே பெற்றன. இதனால் தமிழில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அனுபமாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனையடுத்து தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் அனுபமா.
தெலுங்கிலும் பல படங்களில் நடித்துவரும் அனுபமா சமீபத்தில், நிகில் ஜோடியாக ’கார்த்திகேயா 2’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். சந்து மொண்டேட்டி இயக்கியுள்ள இந்தப் படம் படம் கடந்த 13ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
We were able to breakthrough Hindi film industry because of the path created by @ssrajamouli #Prabhas ‘s Baahubali. We should thank them @actor_Nikhil #Karthikeya2 #Karthikeya2Hindi pic.twitter.com/l8MGCPtmnc
— Pakistan Prabhas Fanclub (@Pak_PrabhasFC) August 18, 2022
இந்நிலையில், இதன் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட அனுபமா பரமேஸ்வரன் மேடையில் இயக்குநர் சந்துவிடம் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார்.
Thanks for the AMAZING WORDS at the #karthikeya2 Success Meet Today sir #Karthikeya2Hindi pic.twitter.com/FyjdvWe719
— Nikhil Siddhartha (@actor_Nikhil) August 16, 2022
அவர் கூறும்போது, “இந்தப் படத்தின் ஷூட்டிங் குஜராத்தில் நடந்துகொண்டிருந்தபோது எனக்கு காயம் ஏற்பட்டது. கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டேன். அந்த ஷெட்யூலின் கடைசி நாளில் தொழில்நுட்பப் பிரச்னையால் படப்பிடிப்பு தடைபட்டது. இது என்னை விரக்தி அடைய வைத்தது. அதற்காக இப்போது இயக்குநரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு அது. இந்தப் படத்தில் சிறந்த கேரக்டரை வழங்கிய இயக்குநருக்கு நன்றி” என்றார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ