‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து ‘கோப்ரா‘வை இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
விக்ரமுக்கு இப்படத்தில் ஏழு கெட்டப்புகள் என்று கூறப்படுகிறது. மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் டீஸர், பாடல்கள் எல்லாம் வெளியாகிவிட்ட நிலையில் ‘கோப்ரா’ திரைக் காணக் காத்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக் குழுவினர் டிவிட்டர் ஸ்பெஸில் கலந்து கொண்ட ‘கோப்ரா’ படம் பற்றியும் படப்பிடிப்புப் பற்றியும் பேசினார். அப்போது கோப்ரா படம் பற்றி ஜாலியாகப் பேசிய விக்ரம், “ரஷ்யாவில் மிக அதிகமான குளிரில் படப்பிடிப்பு செய்தோம். உண்மையில் அந்த குளிரில் கொஞ்சநேரம் கூட நிற்க முடியாது. ஆனால் நீண்ட நேராமாக அங்கு இருந்து படப்பிடிப்பு செய்தொம். இப்படத்தில் உள்ள ஏழு கெட்டப்களும் திணிக்கப்பட்டது அல்ல. கதைக்கு தேவைபட்டது என்பதால்தான் வைத்திருக்கிறோம். ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆகாது நிச்சயம் திரைக்கு வரும். என் மகன் துருவ் விக்ரம் உடன் நான் நடித்த ‘மகான்’ படம் திரையில் வந்திருக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது. ஆனால் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்கள் இந்த வருடம் திரைக்கு வருகிறது” என்று கூறியிருந்தார்.