கொரோனா காலத்தில் மிட்டாய் கணக்காக அனைவரும் சாப்பிட்ட ஒரு முக்கியமான மாத்திரை என்றால் அது டோலோ 650 தான், ஆனால் இந்த மாத்திரையை மக்களுக்குப் பரிந்துரைக்க இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்குச் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்களைக் கொடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
நமக்குக் காய்ச்சல் வந்தால் டோலோ இருக்கு, இப்போ டோலோவுக்குக் காய்ச்சல் வந்திருக்கும் போல.. அப்போ யார் வருவா..?!
இந்தியாவின் புதிய ‘EMS HUB’ ஆக மாறும் தமிழ்நாடு.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்..!

டோலோ-650
டோலோ-650 மாத்திரை தயாரிப்பாளர்கள் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்களை இந்த மருந்தைப் பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு வழங்கியதாக மத்திய நேரடி வரி வாரியம் குற்றம்சாட்டியதை இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1,000 கோடி ரூபாய்
இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக், டோலோ காய்ச்சலுக்கு எதிரான மருந்தை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க 1,000 கோடிகளை இலவசங்களில் முதலீடு செய்துள்ளதாக அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

பொது நல வழக்கு
பொது நல வழக்கு உச்சநீதிமன்றம் விசாரித்த போது நீதிபதி டி ஒய் சந்திரசூட், இது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும், அவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவருக்கும் இதுவே பரிந்துரைக்கப்பட்டது என்றும் கூறினார். மேலும் மருத்துவர்களுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க ஊக்குவிப்பதற்காக இலவசங்களை வழங்கும் மருந்து நிறுவனங்கள் உரிய வகையில் பொறுப்பேற்க உத்தரவிடக் கோரினார்.

வருமான வரித்துறை சோதனை
கடந்த மாதம், பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் டோலோ-650 தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியது.

200 அதிகாரிகள்
புதுடெல்லி, சிக்கிம், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கோவா உட்பட நாடு முழுவதும் 200 அதிகாரிகள் ஒரே நேரத்தில் 40 இடங்களில் சோதனை நடத்தியதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மைக்ரோ லேப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திலீப் சுரானா, இயக்குனர் ஆனந்த் சுரானா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

மைக்ரோ லேப்ஸ் லிமிடெட்
மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் சேகரித்தனர். வரி ஏய்ப்பு தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10 சதவீத வரி
இதைத் தொடர்ந்து மத்திய நேரடி வரித் துறை மருத்துவர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்கள் பெறும் இலவசங்கள் அல்லது இலவச பரிசுகள் அல்லது ஊக்கத் தொகை பெயரில் கொடுக்கப்படும் அனைத்திற்கும் 10% TDS செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Nirmala Sitharaman-க்கு 63வது பிறந்தநாள்.. மதுரை டூ லண்டன்.. வர்த்தக துறை டூ நிதி துறை..!
DOLO-65O maker Micro Labs spent Rs.1000 crore as freebies to doctors for prescribing: Supreme Court
DOLO-65O maker Micro Labs spent Rs.1000 crore as freebies to doctors for prescribing: Supreme Court உண்மையில் தடை செய்ய வேண்டிய freebies இதுதான்.. Dolo 650 கொடுத்த ரூ.1000 கோடி..?!