இலங்கை மக்களுக்கு ஒரு லீட்டர் பெட்ரோலை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் தற்போதைய எண்ணெய் விலைகளை பார்க்கும் போது இந்த நாட்டில் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைவு
உலக சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மிகவும் குறைந்து வருவதாகவும் சம்பிக்க கூறினார்.
120 டொலராக இருந்த ஒரு பீப்பாய் எண்ணெய் தற்போது 92 டொலர்களாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.