அமெரிக்காவின் நெவாடாவில் வசித்து வரும் ஒரு பெண் ஒரே நாளில் 85 வீடுகளை வாங்கியுள்ளார். இது அவரை அறியாமலேயே வாங்கியுள்ளது தான் ட்விஸ்டே.
குழப்பமாக இருக்கிறதா? அமெரிக்காவினை சேர்ந்த அந்த பெண் 85 வீடுகளை தாமாக பணம் கொடுத்து வாங்கவில்லை. இதெல்லாம் ஒரு COPY மற்றும் PASTE பிரச்சனையால் வந்த வினை என்கிறது டெய்லி ஸ்டார்.
ஒரு மதிப்பீட்டிற்காக தனது ஆவணத்தினை கொடுத்திருந்தபோது இந்த தவறு நேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா விசா வாங்க 2024 வரை காத்திருக்க வேண்டும்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
சிறிய பிழை
இந்த பிரச்சனைக்கு பிறகு அவளது ஆவணத்தில் லாட் நம்பர் 1 முதல் 85 வரை என்பதை.. பொதுவான பகுதிகள் ஏ மற்றும் பி என்றும் கூறியது.
அமெரிக்காவினை சேர்ந்த அந்த பெண் நெவாடாவின் ரெனோவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஸ்பார்க்ஸில் உள்ள, ஒரு ஒரே சொத்தினை வாங்க மட்டுமே திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் 4,72,10,946.41 ரூபாய் செலவிட திட்டமிட்டிருந்தார்.
இவ்வளவு செலவா?
ஆனால் தட்டச்சு பிழை காரணமாக அந்த பெண் 3,97,06,75,000 ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். லாஸ் வேகாஸில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் டைட்டில் ஏஜென்சி நிறுவனத்தால் இந்த எழுத்து பிழை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டோல் பிரதர்ஸ்?
இதற்கிடையில் தற்போது தவறுதலாக மாற்றப்பட்ட 86 சொத்துக்களை மாற்றும் பணியில், வெஸ்ட்மின்ஸ்டர் டைட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டோல் பிரதர்ஸ் அமெரிக்காவில் சொகுசு வீடுகளை கட்டி தரும் பணிகளை செய்து வருகின்றது. இந்த பிரச்சனைகள் களையப்பட்டு மீண்டும் வீடுகள் டோல் பிரதர்ஸுக்கு மாற்றப்படும். அதன் பிறகு மீண்டும் மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
நெவாடாவை சேர்ந்த பெண் இந்த இடமாற்றத்தினை நிராகரிக்கவும் செய்யலாம். ஆனால் அவர் அப்படி ஏதும் செய்யவில்லை. அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இது குறித்து வெஸ்ட்மின்ஸ்டர் டைட்டில் நிறுவனமும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் இதுவரையில் கொடுக்கவில்லை என அந்த செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தவறுகள் சில இடங்களில் நடப்பு தான் என்றாலும், ஒரே ஒரு பிழையால்.. இவ்வளவு பிரச்சனையா?
American woman owns 85 homes because of typo
American woman owns 85 homes because of typo/சிறு தவறால் 85 வீடுகளுக்கு உரிமையாளராக மாறிய பெண்..!