670 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடி படையினர் ளுவுகு நேற்று (17) கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 1.45 மில்லியன் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என எஸ் டி எஃப் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரை கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.