சென்னை: தமிழறிஞர் நெல்லை கண்ணனின் தமிழ்ப் பணியும், சமூக பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழறிஞரும் தலைசிறந்த சொற்பொழிவாளருமான திரு.நெல்லை கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து
வருத்த மடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.” என்று கூறியுள்ளார்.