கொழும்பு: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டி இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிபர் பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ல் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவு சென்றார்.பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தங்கியிருந்தார். அங்கு ‘விசா’ காலம் முடிவடைந்ததையடுத்து தாய்லாந்து சென்ற அவர் பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் வரும் 24ம் தேதி அவர் இலங்கை திரும்புவார். அவரால் மீண்டும் இலங்கை மக்களுக்கு சேவை உள்ளதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் தனக்கு , தனது மனைவிக்கும் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டி கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த மாதமே தனது வழக்கறிஞர் மூலம் இதற்கான ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக புதிய மசோதா விதிகளின்படி கிரீன் கார்டு பெறலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement