புதுடெல்லி,
அமெரிக்காவை மையமாகக் கொண்ட சுகாதார ஆய்வு நிறுவனமான ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் உலகளாவிய காற்று தர நிலை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் காற்றின் தரம் குறித்த தரவுகள் திரட்டப்பட்டன. இருப்பினும் உலகின் 6 பிராந்தியங்களில் 103 நகரங்களின் தரவுகள் பரிசீலிக்கப்பட்டன.
காற்றில் கலந்துள்ள நச்சுத்துகள்கள் மற்றும் நைட்ரஹன் டை ஆக்சைடு மக்களின் உடல்நலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இதன்காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 17 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காற்றில் நச்சுத்துகள்களின் அளவு 2.5 அலகுகளைக் கடந்துவருவது அபாயகரமானது என்று தெரிவித்துள்ள ஆய்வறிக்கை தெற்காசிய நாடுகள் காற்று மாசுபாட்டில் முன்னணியில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பட்டியலின்படி இந்திய மாநிலங்களில் டெல்லி முதலிடத்திலும், கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் உள்ளன. நைஜீரியாவின் கனோ நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளாது. டாப் 20 பட்டியலில் கொல்கத்தா 14ஆம் இடத்தில் உள்ளது.
நைட்ரஜன் டை ஆக்ஸைடு வெளியீட்டு அளவைப் பொறுத்தவரை உலகிலேயே சீனாவின் ஷாங்காய் நகரில் தான் அதிகமாக உள்ளது. ஷாங்காயில் ஒரு க்யூபிக் மீட்டர் அளவில் 41.6 மைக்ரோகிராம் நைட்ரஜன் டை ஆக்ஸைடு வெளியீடு உள்ளது.
உலகின் மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியல்:-
1. டெல்லி, இந்தியா (110)
2. கொல்கத்தா, இந்தியா (84)
3. கானோ, நைஜீரியா (83.6)
4. லிமா, பெரு (73.2)
5. டாக்கா, பங்களாதேஷ் (71.4)
6. ஜகார்த்தா, இந்தோனேசியா (67.3)
7. லாகோஸ், நைஜீரியா (66.9)
8. கராச்சி, பாகிஸ்தான் (63.6)
9. பெய்ஜிங், சீனா (55)
10. அக்ரா, கானா (51.9)
11. செங்டு, சீனா (49.9)
12. சிங்கப்பூர், சிங்கப்பூர் (49.4)
13. அபிட்ஜான், கோட் டி ஐவரி (47.4)
14. மும்பை, இந்தியா (45.1)
15. பமாகோ, மாலி (44.2)
16. ஷாங்காய், சீனா (40.1)
17. துஷான்பே, தஜிகிஸ்தான் (39.7)
18. தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான் (38)
19. கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு (35.8)
20. கெய்ரோ, எகிப்து (34.2)